×

45 கிராமங்களில் ஓட்டுவேட்டை அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன்

கிருஷ்ணகிரி, மார்ச் 23: பர்கூர் தொகுதியில், திமுக சார்பில் மாநில திமுக விவசாய அணி துணைத்தலைவர் மதியழகன் போட்டியிடுகிறார். நேற்று வாடமங்கலத்தில் பிரசாரத்தை துவங்கிய அவர், கள்ளியூர், புளியம்பட்டி, குண்டானூர், பாப்பாரப்பட்டி, சாமாண்டப்பள்ளி, பண்ணந்தூர் காலனி, அரசம்பட்டி, காந்தி ரோடு, மஞ்சமேடு, பெண்டரஅள்ளி, மோட்டூர், முருங்கப்பட்டி, கோட்டப்பட்டி, மேட்டுபுலியூர், புலியூர், துறையூர், கீழ்குப்பம், செல்லகுட்டப்பட்டி, புங்கம்பட்டி, நாகர்கோவில், விளங்காமுடி, விளங்காமுடி காலனி, கோடிப்புதூர், மருதேரி, வீரமலை, பெரியகரடியூர், சின்னகரடியூர், புட்டனூர், ராமாபுரம் உள்ளிட்ட 45 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடையே மதியழகன் பேசுகையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், அரசால் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும், அனைவருக்கும் சென்றடைய நான் உழைப்பேன். அதற்காக எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார். பிரசாரத்தின்போது, முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ராஜேந்திரன், தம்பிதுரை, சாந்தமூர்த்தி, வித்யாசங்கர், சக்ரவர்த்தி, வடிவேல், புலவர் கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ., கோவிந்தசாமி, அம்மன் ராஜா, மணிமேகலை அருள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு