×

மடத்துக்குளம் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் வீதி வீதியாக பிரசாரம்

உடுமலை,மார்ச்23: மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன், நேற்று தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கணபதிபாளையம்,சின்னப்பூலாங்கினர்,ஆர்.கிருஷ்ணாபுரம்,முத்துநகர், க்கோணம்,அந்தியூர்,கென்னடிநகர்,ஜல்லிப்பட்டி,ஜீவாநகர், சடையகவுண்டன்புதூர் அப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அவருக்கு பெண்கள் வெற்றி திலகமிட்டு வரவேற்பளித்தனர். அப்போது வேட்பாளர் மகேந்திரன் பேசுகையில், புரட்சி தலைவி ஜெயலிதாவின் நல்லாட்சி தொடர, திட்டங்கள் நிறைவேற, ஏழைகள் வாழ்வாதாரம் உயர அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் அறிக்கை துண்டுபிரசுரங்களை அதிமுகவினர் வீடு வீடாக வழங்கினர்.பிரச்சாரத்தின்போது, கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மருள்பட்டியில் 20 பேர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி மகேந்திரன் முன்னிலயில் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், துங்காவி ஊராட்சி உடையார்பாளையத்தில் 20  அமமுகவினர் விலகி, அதிமுகவில் இணைந்தனர்.

Tags : AIADMK ,Mahendran Veedhi ,Madathukulam ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...