×

பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

 

திருப்பூர், ஜூன் 12: திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட புறநகர பகுதிகளுக்குமான நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்ல வந்தவர் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்திலேயே உறங்கியுள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் அவரது அருகில் உறங்குவது போல படுத்து அருகில் இருந்தவரின் செல்போனை திருடிச் சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த நபர் எழுந்து பார்த்தபோது மொபைல் போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் பார்த்தும் மொபைல் போன் கிடைக்கவில்லை.

அருகில் இருந்த கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பார்வையிட்டபோது இவரது செல்போனை ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது. வெளியூர் செல்ல வேண்டிய அவசரத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் பேருந்தில் ஏறிச் சென்றார்‌. இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Erode ,Salem ,Namakkal ,Thiruvannamalai ,Tarapuram ,Udumalai ,Gangaim ,Tirupur Kalayan ,Karunanidhi ,Central Bus ,Station ,
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு...