×

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

உடுமலை, மார்ச் 22: மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., நேற்று பிரசாரத்தை துவக்கினார். உடுமலை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர்புதூர், சின்னப்பன்புதூர், செல்லப்பம்பாளையம், உடுக்கம்பாளையம், சாளையூர், ராவணாபுரம், கரட்டூர், கரட்டுமடம், எரிசனம்பட்டி, கொடிங்கியம், வல்லக்குண்டாபுரம், ஜே.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்றும், திறந்த வேனில் சென்றும் வாக்குசேகரித்தார்.
அப்போது ஜெயராமகிருஷ்ணன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும். மின்கட்டணம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பழைய தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கப்படும். ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும், என உறுதி அளித்தார். பிரசாரத்தின்போது,  மேற்கு ஒன்றிய செயலாளர் புவியரசு, வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முபாரக் அலி,கதிரேசன், ஊராட்சி தலைவர் செழியன், பாரதிகோவிந்தராஜ், ஒன்றிய குழு துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி தங்கவேல், மாவட்ட கவுன்சிலர் மலர்விழி பாபு, தென்றல் செந்தில், சோமு, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, வாசு, ஒன்றிய கவுன்சிலர் கவிதாமணி ரங்கநாதன், கூட்டணி கட்சிகளான கொமதேக ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, சிவக்குமார், பிரவீன், மதிமுக ஒன்றிய செயலாளர் ஆனந்த், தங்கவேல், செந்தில், இந்திய கம்யூ சவுந்தர்ராஜன், மா.கம்யூ கனகராஜ், பச்சை துண்டு பரமசிவம், ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Madathukulam ,DMK ,Jayaramakrishnan ,
× RELATED விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்...