×

பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அரவக்குறிச்சி அருகே வளையப்பட்டியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 45வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

அரவக்குறிச்சி. மார்ச்.21: அரவக்குறிச்சி கிராம பகுதியில் பொது சுகாதார துறையின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்நடைபெற்றது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கரூர் கலெக்டர் உத்தரவின் பேரிலும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் டாக்டர் சந்தோஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் அரவக்குறிச்சி வளயபட்டி, ராமக் கவுண்டன் புதூர், பள்ளபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இம் முகாமில் சிறப்பு நிகழ்ச்சியாகஇதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும்ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை, மலேரியா ரத்த தடவல், காச நோய் பரிசோதனை, ஈ . ஸி. ஜி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது..

பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்ப நிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் கொண்டு பரிசோதிக்கப் பட்டது.. குடும்ப நலம், ஊட்டச்சத்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் மற்றும் சித்த மருத்துவம் குறித்த கண்காட்சி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மலைக்கோவிலூர் வட்டார மருத்துவ அலுவலர் கவுசல்யா, ராஜவர்ஷினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். சிகிச்சையில் பொதுமருத்துவம், மனநல மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், பல், தோல்நோய், சித்த மருத்துவம் ஆகிய பிரிவுகளில் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Aarti ,Valayapatti ,Aravakurichi ,
× RELATED கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது