×

போச்சம்பள்ளியில் வாட்டி வதைக்கும் வெயில் மா மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயிகள்

போச்சம்பள்ளி, மார்ச் 20:போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருவதால் மா மரங்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்ப மண்டல பகுதியான போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயில் தாக்கம் கடுமையாகவும், குளிர் காலத்தில் பனியின் தாக்கம் அதிகமாகவும் இருக்கும். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக வெயில் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டாரத்தில் மா மரங்கள் காய்ந்து கருகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடியில் போச்சம்பள்ளி 2வது இடம் வகிக்கிறது. தற்போது கடுமையான வெயில் வாட்டி வருவதால் மா மரங்கள் அதிகளவில் காய்ந்து வருகிறது.

மரங்களை காப்பாற்ற முடியாததால் விவசாயிகள் காய்ந்த மரங்களை வெட்டி சூளைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், இருக்கின்ற மரங்களை காப்பாற்ற வேண்டிய நிலையில், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி மரங்களை காப்பாற்றி வருகின்றனர். இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில், போச்சம்பள்ளியில் வெயில் வாட்டி வருவதால் மா மரங்கள் காய்ந்து வருகிறது. வருடந்தோறும் மா விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது மா மரங்கள் காய்ந்து வருவது மிகுந்த வேதனையாக உள்ளது என்றனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...