×

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

திருவாரூர், மார்ச் 20: அதிமுக ஆட்சி ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் எம்எல்ஏ தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தொகுதி முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொகுதிக்குட்பட்ட கொல்லாபுரம் பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய சமூகத்தினரிடம் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி அரசும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. சிறுபான்மையினர் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புனித ஹஜ் பயணத்திற்கான நிதியுதவி ரூ.6 கோடியிலிருந்து 10 கோடியாக உயர்த்தப்படும். இஸ்லாமியர்களுக்கான மயான கொல்லைக்குரிய இடம் அரசால் இலவசமாக வழங்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இது மட்டுமின்றி திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாமிய அறிவு சார் கருத்துக்களை பரப்பிய அல்லாமா அப்துல்ஹமீது பார்கவி பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம் அமைக்கப்படும். மேலும் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியையும் தெரிவித்துக்கொள்வதுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags : AIADMK ,Qaide ,Millat ,
× RELATED அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்