×

சைதை பகுதியில் மா.சுப்பிரமணியன் வாக்குசேகரிப்பு: எங்களுடைய வாக்குகள் நிச்சயம் உங்களுக்கு தான் : இளம்தலைமுறையினர், பெண்கள் வாக்குறுதி

சென்ைன: சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவர் மேயராக இருந்த போதும் சரி, கடந்தமுறை சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றபோதும் தினசரி தொகுதிக்குள் என்ெனன்ன பிரச்னைகள் உள்ளது, என அன்றாடம் கேட்டறிந்து அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வந்தார். மேலும் மக்களோடு நெருக்கமாக இருக்க கூடியவர். சென்னை  மாநகர மேயராக இவர் ஆற்றிய பணிகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவரை தொகுதியில் அறியாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பொதுமக்கள், வணிகர்கள், பொதுநல சங்கத்தினர், அரசு ஊழியர்கள்,  மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். இதேபோல், சட்டமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகளாக ஆற்றிய பணிகளும், சைதாப்பேட்டை தொகுதியில் இவர் அறிமுகப்படுத்திய முற்போக்கான சீர்திருத்த பணிகளும்  குறிப்பிடத்தக்கவை.

வர்தா புயல், வெள்ளப்பாதிப்பு நேரத்தில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகமான மரங்கள் விழுந்தன. இதை கருத்தில் கொண்டு, சைதாப்பேட்டை தொகுதியில் ‘பசுமை சைதை’ திட்டத்தை 2017ம் ஆண்டு  ஜூலை 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்து தொடங்கினார். இத்திட்டத்தின்படி 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து, இதுவரை 96,000 மரக்கன்றுகள் தொகுதி முழுவதும் நட்டு, ஓர் பசுமை புரட்சியை  ஏற்படுத்தியுள்ளார். இத்திட்டங்கள் தொடர்ந்து சைதை தொகுதியில் செயல்படுத்துவதற்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க நேற்று காலை 9 முதல் மாலை வரை சைதை தொகுதி 142வது வட்டத்தில் சுப்பிரமணிய சாமி கோயில்  தெருவிலிருந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இளம் தலைமுறையினர், பெண்கள் அனைவரும் எங்களுடைய வாக்குகள் அனைத்து உங்களுக்கு தான் என்று கூறி அவரை உற்சாகமாக வரவேற்று மாலை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இதையடுத்து  அவர்களுக்கு மா.சுப்பிரமணியன் நன்றியை தெரிவித்தார்.  பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், பகுதி கழக நிர்வாகிகள் களக்காடி எல்லப்பன், சி.பி.இறைவன், வட்ட  செயலாளர்கள் எஸ்.பி.கோதண்டம், எம்.நாகா, சைதை கோ.மதிவாணன், சை.மு.சேகர், ந.தமிழரசு உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.

Tags : Ma Subramanian ,Saitai ,
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...