×

திருவண்ணாமலையில்மயானக்கொள்ளை விழாவில் அங்காளம்மன் வீதியுலா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, மார்ச் 14: திருவண்ணாமலையில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி, அங்காளம்மன் வீதியுலாவில் பங்கேற்ற பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் அனைத்து சிவன் கோயில்களிலும் நடந்தது. மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து இறைவனை வழிபட்டனர். சிவன் கோயில்களில் இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடந்தது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நள்ளிரவில் லிங்கோத்பவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.அதைத்தொடர்ந்து, மாசி மாத அமாவாசை தினமான நேற்று மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை கருவாட்டுக்கடை தெரு, மணலூர்பேட்டை சாலை, புதுவாணியங்குளத்தெரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அங்காளம்மன் ேகாயில்களில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் வீதியுலா நடந்தது.

அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிவன், பார்வதி, காளி உள்ளிட்ட பல்ேவறு ேவடங்கள் அணிந்த பக்தர்கள், ஊர்வலத்தில் பங்ேகற்று தங்களுடைய ேநர்த்திக்கடனை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ஈசான்ய மயானத்தில் மயானக்கொள்ளை விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மயானக்கொள்ளை விழா, அங்காளம்மன் வீதியுலா நடந்தது.

Tags : Angalamman Veediula ,Mayanakolai festival ,Thiruvannamalai ,
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...