பெண்களை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது

அயோத்தியாப்பட்டணம், மார்ச் 13: அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனியை சேர்ந்த கணேஷ் மகன் பிரபு(32). இவர் மீது கொலை வழக்கு, பெண்களை பலாத்காரம் செய்த வழக்கு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் நெருங்கிய நண்பன் பிரபு எனவும், இவர்கள் தொழிலாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் செய்து வந்துள்ளனர். குறிப்பாக வீட்டில் ஆட்கள் இல்லாத போது, ஏராளமான பெண்களை சித்ரவதை செய்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இவருக்கு பயந்துகொண்டு மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள், வீட்டை மாற்றிக் கொண்டும் சென்றுள்ளனர்.

காரிப்பட்டி காவல் நிலையத்தில் இவர் மீது புகார்கள் குவிந்ததன் காரணமாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், எஸ்ஐர் மோகனசுந்தரம் ஆகியோர் தலைமையிலான போலீசார், 20நாட்களுக்கு முன் பிரபுவை சுற்றி வளைத்து கைது செய்து, சங்ககிரி சிறையில்அடைத்தனர். பின்னர், ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், பிரபுவை குண்டர் சட்டத்தில் அடைக்க, இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கலெக்டர் ராமனுக்கு பரிதுரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பிரபு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More