×

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருச்சி, ஜூலை 8: திருச்சி மணப்பாறை காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் முகேஸ்குமார் (18). இவர் கருமண்டபம் பகுதியில் ஒரு அறை எடுத்து தங்கி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்த பிறகு, தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை முகேஸ்குமார் தான் வேலை செய்யும் அலுவலகத்தின் 2வது மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் முகேஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,Mukesh Kumar ,Kavalkaranpatti, Manapparai, Trichy ,Karumandapam ,Mannarpuram ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது