×

பிரசவத்துக்கு லஞ்சம் கேட்ட 2 ஒப்பந்த ஊழியர்கள் `டிஸ்மிஸ்’

 

திருச்சி, ஜூலை 8:திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு லஞ்சம் கேட்ட 2 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி அரசு மருத்துவமனை யில் பிரசவத்திற்காக தனது மனைவியை தொழிலாளி ஒருவர் அனுமதித்து உள்ளார். அப்போது பணியாளர்கள் தன்னிடம் லஞ்சம் கேட்ட தாக கூறி வீடியோவுடன் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் திருச்சி அரசு மருத்து வமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தால் ரூ.5 ஆயிரம் இல்லாமல் வரக்கூடாது.

அங்குள்ள ஒவ்வொரு பணியாளரும் லஞ்சம் கேட்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் 2 ஒப்பந்த ஊழியர்கள் நர்மதா, கோமதி ஆகிய இருவரை பணி நீக்கம் செய்து உள்ளனர்.

 

Tags : Trichy ,Trichy government hospital ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது