×

வாழப்பாடி புழுதிக்குட்டை அணையில் மீன்பிடிக்கும் தகராறில் வாலிபரை துப்பாக்கியால் தாக்கிய போலீஸ்: சுட்டுக்கொல்வதாக மிரட்டல்; உடனடி சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் நேற்று முன்தினம் இரவு, அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் புழுதிக்குட்டை அணைக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு, சேலம் மாநகர போலீசில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஜான்ராஜ், நண்பர்களுடன் வந்துள்ளார். அணையில் மீன் பிடிப்பது தொடர்பாக சுரேசுக்கும், போலீஸ்காரர் ஜான்ராஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்ராஜ் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுரேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டினாராம். இந்த அடிதடியில் சுரேஷ் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அங்கு போலீஸ்காரர் ஜான்ராஜிடம் நாட்டுத்துப்பாக்கி ஏதும் இல்லை. ஆனால் அவர் போதையில் இருந்துள்ளார். அதனால், அந்த துப்பாக்கி எங்குள்ளது என்று அவரிடமும், உடன் வந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டுத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக சுரேஷ் மற்றும் ஊர் மக்கள் வாழப்பாடி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸ்காரர் ஜான்ராஜை சஸ்பெண்ட் செய்து, கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.

Tags : fluff dam ,Salem ,Suresh ,Athanurpatty ,Vaipapadi ,Salem district ,Puputikuttai Dam ,Salem Municipal Police ,
× RELATED சென்னை புழல் காவாங்கரை சிக்னல் அருகே...