×

7 வயது சிறுமியிடம் ஒரு வருடமாக அத்துமீறிய அசுரன் கைது: மற்றொரு கொடூரனுக்கு வலை

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே 7 வயது சிறுமியிடம் ஒரு வருடமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சச்சு (21), அலன் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக அப்பகுதியை சேர்ந்த ஒரு 7 வயது சிறுமியை மிட்டாய் மற்றும் விளையாட்டு பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறி தங்களுடைய வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சச்சு, சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு நடத்திய விசாரணையில் சச்சுவும், அலனும் சேர்ந்து அந்த சிறுமியிடம் கடந்த 1 வருடமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இருவர் மீதும் போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்த போலீசார் சச்சுவை கைது செய்தனர். அலன் தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Thiruvananthapuram ,Kollam ,Sachu ,Alan ,Kadaykal ,Kollam, Kerala ,
× RELATED வாழப்பாடி புழுதிக்குட்டை அணையில்...