×

துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டலில் போதை ஆசாமி ரகளை: ஊழியர் மீது தாக்குதல்

குலசேகரம்: குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிரபல ஓட்டலில் கடந்த 3 நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை மணியன்குழியை சேர்ந்த ஒருவர் சாப்பிட வந்தார். அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இருக்கையில் இருந்து சரிந்து விழுவது போல் இருப்பதை பார்த்த ஓட்டல் ஊழியர் ஓடி சென்று அவரை தாங்கி பிடித்தார். உடனே அவர், நான் போதையில் இருக்கிறேனா? என கேட்டு ஊழியரை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் ஓட்டல் ஊழியருக்கும், போதை ஆசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். அதே போதை ஆசாமி நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குடும்பத்துடன் இரவு 10.30க்கு அந்த ஓட்டலுக்கு காரில் வந்தார். அப்போதும் போதையில். காரை ஓட்டல் முன் நிறுத்தியவர் ஏற்கனவே தகராறு செய்த ஊழிரை தேடினார்.

சப்ளை செய்து கொண்டிருந்தவரை போதை ஆசாமி தாக்கினார். இதனால் இருவருக்கும் மீண்டும் கைகலப்பு வரை சென்றது. திடீரென காருக்குள் சென்று துப்பாக்கி (ஏர்கன்) எடுத்து வந்து சுடுவதாக மிரட்டினார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் போதை ஆசாமியை சுற்றி வளைத்தனர். அவரது மனைவி மற்றும் மகனும் சேர்ந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர். போதை ஆசாமி துப்பாக்கியை விடாமல் சுட்டு தள்ளுவேன் என மிரட்டினார். பின்னர் போராடி துப்பாக்கியை பறித்து, அவரை காரில் ஏற்றி அனுப்ப முயன்றனர். இதனிடையே தகவலறிந்து வந்த போலீசார் போதை ஆசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஏர்கன்னையும் பறிமுதல் செய்தனர். இரவு முழுவதும் போலீசாரிடமும் அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

Tags : Kulasekaram ,Pechiparai Maniankuzhi ,Kumari district ,
× RELATED சென்னை புழல் காவாங்கரை சிக்னல் அருகே...