×

ஏர் ஓட்டும் மாட்டுக்கு உழக்கோலில் அடி போல உள்ளது; மீண்டும் மீண்டும் விவசாயிகளை ஏமாற்றுகிறது விஜய் அரசு: தவெக வேட்பாளர் கண்டன பதிவால் பரபரப்பு

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தவெக வேட்பாளர் அருள்ஆறுமுகம், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: விவசாய கடன் தள்ளுபடியில் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது தவெக அரசு. நிதி இல்லை என்பதற்காக நீதி கிடைக்காதா தமிழக விவசாயிகளுக்கு. ஐந்து ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, அதற்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதிபடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யுங்கள். விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யும் கடன் என்பது அரசிற்கு வீண் செலவு கிடையாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கர் பயிர் செய்பவர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினால், 5 ஏக்கர் பயிர் செய்பவர் ரூ.1.50 லட்சம் கடன் வாங்குவார். ஏன் 1 முதல் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து கடன் வாங்கி பயிர் செய்கிறாய் என்று கேட்கிறதா தவெக அரசு?. மேலும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வாங்கிய கடனுக்கு ரூ.35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என்பது ஏர் ஓட்டும் மாட்டுக்கு உழக்கோலில் அடி என்பது போலத்தான் உள்ளது.

விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு குரல் எழுப்பி போராடியதை தொடர்ந்து, ரூ.50 ஆயிரத்தை ரூ.75 ஆயிரமாக மாற்றி வரையறை செய்தது எப்படி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது ஆகும். மீண்டும் மீண்டும் விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவே ஆளும் தவெக அரசு செயல்படுகிறது. விவசாயிகள் போராட்டம் தொடரும். உழவர்களாய் ஒன்றிணைவோம், உரிமையை மீட்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக, இனியும் முட்டுக்கொடுக்க முடியாது என ஏற்கனவே முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டன பதவிட்டிருந்த தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம், தற்போது மீண்டும் தனது கண்டனத்தை பதிவிட்டிருப்பதும், போராட்டம் தொடரும் என அறிவித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் வெளியிட்ட மறு அறிவிப்பு, விவசாயிகளை அமைதிபடுத்தும் என தவெகவினர் எதிர்பார்த்த நிலையில், கண்துடைப்பு அறிவிப்பு என விவசாயிகள் மீண்டும் கொந்தளிக்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay Govt ,Dweka ,Daveka ,Arulaarumugam ,Tiruvannamalai ,Government of Taveka ,Tamil Nadu ,
× RELATED தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்...