×

வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தவெக அரசின் செயல்திட்டம் என்ன – அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செய்துமுடிக்கவும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நேரடிக்கடன் ரூ.10 லட்சம் கோடி, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடி என மொத்தக் கடன் குறைந்தது ரூ.13.18 லட்சம் கோடியாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35% வட்டிக்கு செலவிடப்படுவதாகவும் அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் எந்த வகையிலும் வியப்பளிக்கவில்லை.

தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா? இந்த நிலைமையை த.வெ.க. அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது? மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது? என்பதற்கான செயல்திட்டத்தை தவெக அரசு அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

 

Tags : TDP government ,Anbumani Ramadoss ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,TDP ,
× RELATED தவெகவின் ஒரு மாத கால ஆட்சியில்...