சென்னை: செயற்கை நுண்ணறிவால் நேர்மை, ஒழுக்கம், நெறிமுறைகளை கற்றுத்தர முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜி.பி.டி. போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு இணையாக முடியாது. ஆன்லைன் வகுப்புகள் ஒருபோதும் நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக முடியாது. சட்டக்கல்வியை பொறுத்தவரை வகுப்பறை பாடங்கள் மூலம் மட்டுமே துடிப்பான வழக்கறிஞர்களாக பணியாற்ற முடியும்

