×

சோழிங்கநல்லூரில் ரூ.47.20 கோடியில் அமைக்கப்படும் மழைநீர் கால்வாயில் ராட்சத குழாய் நீரோட்டம் தடைபடும் அபாயம்: பொதுமக்கள் எதிர்ப்பு

 

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் இருந்து கலைஞர் கருணாநிதி சாலை வழியாக பக்கிங்காம் கால்வாயில் இணைக்க கூடிய வகையில் மழைநீர் கால்வாய் பணி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரூ.47.20 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் இந்த மழைநீர் கால்வாய் பணியின்போது சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கல்லூரி அருகே மழைநீர் வடிகால்வாய் உள்ளே ராட்சத கழிவுநீர் குழாய் பதிக்கப்படுகிறது, என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய்க்குள் ராட்சத கழிவுநீர் குழாய் பதிப்பதால், மழைநீர் சுலபமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மழைநீர் கால்வாய்க்குள் ராட்சத கழிவுநீர் குழாய் அமைவதை கண்டும் காணாமல் அதிகாரிகள் தொடர்ந்து பணி மேற்கொள்வதற்கு சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மழைநீர் கால்வாய் அகலமாக கட்டுவதற்கு முக்கியம் காரணம் மழைநீர் தங்கு தடையின்றி சொல்வதற்காக தான். ஆனால் இந்த பகுதியில் அமைக்கும் மழைநீர் வடிகால்வாய்க்குள் ராட்சத கழிவுநீர் குழாய் பதிக்கப்படுவதால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் மழை காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகும்.

எனவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு தற்போது பணி நடைபெறும் இடத்திற்கு வடக்கு பகுதியில் காலியாக உள்ள பழைய மழைநீர் கால்வாயை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் துறை சார்ந்த அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : Rainwater ,Chozhanganallur ,Buckingham Canal ,Artist Karunanidhi Road ,Choshinganallur Chemmozhi Road ,
× RELATED தமிழக தீயணைப்புத்துறை ஆணையத் தலைவர்...