- முதல் அமைச்சர்
- விஜய்-சங்கீதா
- சென்னை
- விஜய்
- சங்கீத
- செங்கல்பட்டு
- தவெகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விஜய்…
சென்னை: திருமணத்தை மீறி பிரபல நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி முதல்வர் விஜய்யின் விவாகரத்து கேட்டு மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு மீதான விசாரணை இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. நடிகரும், தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்பு இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அதோடு அன்றைய தினம் விஜய் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தேர்தல் பிரசாரம் காரணமாக விஜய் வெளியில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி அளிக்குமாறு விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் சங்கீதா தரப்பிலும், காணொலி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்குமாறும் மனு தாக்கல் செய்யப்படது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணையின் போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்க மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே, லண்டனில் வசித்து வந்த சங்கீதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாகவும், குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்த விவாகரத்து வழக்கு முதன்முறையாக நீதிமன்றத்திற்கு வருவதால் அரசியல் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
