×

நாமக்கல் அரசு விழாவில் தவெகவினர் அட்ராசிட்டி: ரீல்ஸ் போட வீடியோ எடுத்ததால் எரிச்சல் அடைந்த அதிகாரிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் அரசு துறைகள் சார்பில், 595 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேடையை சூழ்ந்து கொண்டு, இந்த நிகழ்வுகள் முழுவதையும் ரீல்ஸ் போடுவதற்காக தவெகவினர் செல்போனில் வீடியோ எடுத்ததால் அதிகாரிகள் எரிச்சலடைந்தனர். நாமக்கல்லில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், 595 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சருக்கு கட்சியினர் பொன்னாடை அணிவித்தது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது போன்ற நிகழ்வுகளை, ரீல்ஸ் போடுவதற்காக தவெகவினர் தொடர்ந்து தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தபடி இருந்தனர். இதனால் விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் எரிச்சல் அடைந்தனர். மேலும், விழாவிற்கு அமைச்சர் வரும் நேரம் குறித்து உரிய தகவல் தெரிவிக்காததால், அதிகாரிகள் காலை 9 மணி முதல் காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் பிற்பகல் 12 மணிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு சென்றதால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Thavekas ,Namakkal ,
× RELATED மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண்...