- ஈரோடு
- இந்திய அண்டர் 19 கிரிக்கெட் அணி
- குமார்
- பரதீநகர், ஈரோடு மாவட்டம், சென்னிமலை
- கிஷோர்
- அண்டர்-19
- அணி
ஈரோடு: ஈரோடு மாணவர் ஒருவர் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை பாரதிநகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கிஷோர் (19). இவர் 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 4ம் தேதி இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கிஷோர் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.
இந்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு 19 வயதுக்குட்பட்டோர் அணியில் பந்து வீச்சாளராக விளையாடி கொண்டிருந்தார். இந்திய அளவில் நடைபெற்ற கோச் பிஹார் டிராபி விளையாட்டு தொடரில் தமிழ்நாட்டு அணி வெற்றி பெற கிஷோர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
