×

சில்லிபாயிண்ட்…

* இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில், கிங்ஸ்டன் நகரில் நேற்று நடந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த அணியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இடம் பெற்றிருந்தார். அவர் நேற்று, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து உள்ளார். 35 வயதான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் 19,346 ரன்களை குவித்து உள்ளார். இதில், 48 சதங்கள் அடங்கும

* இந்தியாவின் முன்னணி துப்பாக்கிச்சுடுதல் வீரராக திகழ்ந்தவர் ஜஸ்பால் ராணா. இவர் காமன்வெல்த் கேம்ஸ், ஆசிய போட்டி உள்ளிட்டவைகளில் 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்று உள்ளார். தற்போது பயிற்சியாளராக இருந்த வந்த ராணா, மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

* ஆப்கானிஸ்தான்-இந்தியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித்சர்மா களம் இறங்குகிறார்.

Tags : Chillipoint… ,West Indies ,T20 ,Kingston ,Sri Lanka ,
× RELATED நியூசிலாந்து அணியின் முன்னாள்...