- சிந்து
- ஆஸ்திரேலிய ஓபன்
- பூப்பந்து
- சிட்னி
- இந்தியா
- சிந்து
- ஆஸ்திரேலிய ஓப்பன் பேட்மிண்டன்
- ஜின்டு
- சீனா
- தைபே
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து காலிறுதியில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனா தைபேயின் சென் சு யுவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, சென் சு யுவை 21-6, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா, ஜப்பானின் அகானே யாமாகுசியிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். நாளை நடக்கும் அரையிறுதியில் சிந்து, அகானே யாமாகுசி மோதவுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அம்சகருணன், அர்ஜூன் ஜோடி, சீனாவின் தைபேயின் சென், லீயு ஜோடியிடம் 19-21, 9-16 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.
