திருமங்கலம், ஜூன் 13: டூவீலரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். காரியாபட்டி அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுருகன் (42). இவர், மதுரை மாவட்டம் ஆவியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்திரா (38). பழனிமுருகன் கள்ளிக்குடி அருகே, குராயூர் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு டூவீலரில் சென்றார்.
அங்கு விஷேசம் முடிந்து மீண்டும் டூவீலரில் காரியாபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
