×

வீணாகும் காவிரி குடிநீர்

திருப்புத்தூர் அருகே என்.புதூர் பகுதியில் குழாய் சேதம் அடைந்து காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை காவிரி கூட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்புத்தூர் அருகே என்.புதூர் பகுதி கண்டவராயன்பட்டி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பு எதிரேயும். பிள்ளையார் கோயில் அருகேயும், புதுப்பட்டி சொசைட்டி அருகேயும் காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினந்தோறும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.

 

 

Tags : Cauvery ,N. Pudur ,Tiruputhur ,DMK ,Trichy ,Ramanathapuram ,Kandavarayanpatti road ,Tiruputhur… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து