×

மது விற்றவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் குடியிருப்பு பகுதியில், அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றுள்ளார். அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த பெருவண்டல் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சரவணன்(46) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து டூவீலர் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து திருவாடானை நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : R.S. Mangalam ,Rafiq ,Saravanan ,Periyasamy ,Peruvandal ,
× RELATED 200 ஜெலட்டின் குச்சிகள் கடத்திய...