×

விடுதிகளை ஆய்வு செய்ய கோரிக்கை

வருசநாடு, ஜூன் 13: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாததால் இந்த விடுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு தங்கி படித்து வந்த மாணவிகள், விடுதியை காலி செய்துவிட்டு தங்களது வீடுகளில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. எனவே ஏழை, எளிய மாணவிகள் நலன் கருதி, இங்குள்ள தங்கும் விடுதிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags : Varusanadu ,Mayiladumparai ,Kadamalaikundu, Theni district ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து