தேனி, ஜூன், 13: முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜவில் இருந்து விலகி, வீ த லீடர்ஸ் எனும் பெயரில் துவக்கி உள்ள புதிய இயக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு இந்த அமைப்பின் உறுப்பினரும், கல்வியாளருமான நாராயணபிரபு தலைமை வகித்தார்.
உறுப்பினர்கள் தங்கபிரபு, தங்கபாண்டியன், கதிர்வேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, ஆன்லைன் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து கல்வியாளர் நாராயணபிரபு பேசினார். இதனையடுத்து, இணையதளம் மூலம் வீ த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்தது.
