×

அரசு தலைமை பொறியாளர் குவித்த ரூ.100 கோடி சொத்துகள் பறிமுதல்: ஆந்திராவில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி

திருமலை: அரசு தலைமை ெபாறியாளர் வீடு உள்பட 15 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநில அரசில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் தலைமை பொறியாளராக இருப்பவர் மோகன். இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிகளவு கமிஷன் வசூலிப்பதாகவும், மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மோகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 15 இடங்களில் நேற்றுமுன்தினம் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது வருமானத்திற்கு அதிகமாகவும், கணக்கில் வராத வகையிலும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக ரூ.55 லட்சம் ரொக்கம், 15 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் இரண்டரை கிலோ தங்க நகைகள், ரூ.3,60,000 மதிப்புள்ள 6 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.1.26 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், ரூ.11.25 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிஜாமாபாத் மாவட்டம் முல்லாங்கி கிராமத்தில் 5 இடங்களில் 19.38 ஏக்கர் நிலம், ஐதராபாத், கொம்பள்ளியில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள், கச்சிபவுலியில் ரூ.7.34 கோடி மதிப்புள்ள 4 குடியிருப்புகள், மியாபூரில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள வீடு, குக்கட்பள்ளியில் ரூ. 62.14 லட்சம் மதிப்பில் ஒரு வீடு, நிஜாமாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு ரூ.1 கோடி முன்பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ேமலும் மோகனின் வங்கிக்கணக்கில் ரூ.1.44 கோடி இருந்ததும் தெரியவந்தது. மோகன் சொத்துகளின் ஆவண மதிப்பு ரூ.17.94 கோடியாக இருந்தாலும் இதன் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Telangana state government… ,
× RELATED 9 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிந்தது;...