- கேரள பிரதமர்
- திருவனந்தபுரம்
- கேரள அரசு போக்குவரத்து கழகம்
- ஆர்டிசி
- கேரளா
- முதல் அமைச்சர்
- வி.டி. சதிசன்
- முதலமைச்சர் வி.டி.
திருவனந்தபுரம்:அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்குவதின் மூலம் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருடத்திற்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறினார். திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கேரள முதல்வர் வி.டி. சதீசன் நிருபர்களிடம் கூறியது: ஜூன் 15ம் தேதி முதல் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
இதற்கு வயது வித்தியாசமோ, வருமான வரம்போ எதுவும் கிடையாது. திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு பிரியதர்ஷினி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குறுகிய தூரத்திற்கு இயக்கப்படும் சாதாரண பஸ்களில் மட்டுமே இலவச பயணம் அனுமதிக்கப்படும். இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். இதன் மூலம் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாதம் ரூ. 65 முதல் ரூ. 75 கோடி வரை நஷ்டம் ஏற்படும். வருடத்திற்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்படும்.
ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாநில அரசு வருடத்திற்கு ரூ. 1500 கோடி வழங்கி வருகிறது. இலவசப் பயணம் மூலம் ஏற்படும் நஷ்டத்தையும் கேரள அரசு ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
