காவிரி நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

சேலம், மார்ச் 6: மேச்சேரி தி காவிரி நர்சிங் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தி காவிரி நர்சிங் கல்லூரி முதல்வர் அமுதா வரவேற்றார். தி காவிரி பொறியியல் கல்லூரியின் முதல்வர் துரைசாமி வாழ்த்தி பேசினார். கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், காவேரி மருத்துவமனையின் இருதய மருத்துவ ஆலோசகர் டாக்டர் கபிலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் தாளாளர் ராமநாதன், கல்வி நிறுவனங்களின் கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணை தலைவர் மதன் கார்த்திக், செயல் இயக்குநர் கருப்பண்ணன், முதல்வர்கள் நந்தகுமார், செல்வகுமார், முருகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்வி நிறுவனங்களின் செயல் அலுவலர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

Related Stories:

>