×

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 16-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் இவா ஜோவிக்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 7-6 (7-5), 6-7(3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-0, 7-5 என்ற செட் கணக்கில் 53-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரியாவின் தரியா கசட்கினாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 19 வயதாகும் 28-ம் நிலை வீரரான பிரேசிலின் ஜோவா பொன்சேகாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 6-4, 3-6, 5-7, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Tags : French Open ,Djokovic ,Paris ,Japan ,Naomi Osaka ,Eva Jovic ,United States ,
× RELATED ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து...