- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்
- சாட்விக்
- சிராக்
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் ஓப்ப
- இந்தியா
- சாட்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி
- சிராக் ஷெட்டி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியும், உலகின் முதல் நிலை ஜோடியான கொரியாவின் கிம் வோன் ஹோ, சியோ சியுங் ஜே ஜோடியும் மோதின.
இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 16-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுய்சி ஷிமோகாமி, சயாகா ஹோபாரா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
