×

ஆசிய போட்டி தகுதிச்சுற்று டி20 கிரிக்கெட் 313 ரன்கள் குவித்து நேபாளம் உலக சாதனை: ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த வீரர்

சிங்கப்பூர்: 2026ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் தகுதிச்சுற்று டி20 கிரிக்கெட் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் நேபாள அணியும், சீனா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாள வீரர்கள், சீனப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அவர்கள் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களைக் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் 4வது ஓவரில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குஷால் புர்டெல் அற்புதமாக விளையாடி 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 16 சிக்சர்களுடன் 129 ரன்கள் விளாசினார். இவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி அட்டகாசப்படுத்தினார். குஷால் மல்லா 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்தார்.

ரோஹித் பௌடல் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் அவுட்டாகாமல் 69 ரன்கள் எடுத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் இருமுறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற உலக சாதனையை நேபாளம் தனதாக்கிக்கொண்டது. இந்த போட்டியில் நேபாள அணி, சீனா அணியை 221 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Tags : Nepal ,Asian Games T20 ,Singapore ,2026 Asian Games Men's T20 Cricket Qualifier ,China ,
× RELATED ஐபிஎல் இறுதிப் போட்டி: குஜராத் அணியை...