×

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.24 லட்சம் அபராதம்

 

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 89 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியின்போது பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவிர, சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் வீரர் உட்பட மற்ற வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஐபிஎல் ஊடக ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : Ruturaj Gaikwad ,Ahmedabad ,Chennai Super Kings ,IPL ,Gujarat Lions ,
× RELATED ஐபிஎல் 2026: பெங்களூரு அணிக்கு எதிரான...