×

அஸ்மிதா சாலிஹா காலிறுதியில் தோல்வி

 

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்து வரும் மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா, டென்மார்க் வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் ஜேர்ஸ்பெல்ட் உடன் மோதினார். முதல் செட்டை 23-21 என்ற புள்ளிக் கணக்கில் அஸ்மிதா கைப்பற்றினார்.

இருப்பினும் அடுத்த இரு செட்களில் சுதாரித்து சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஹோஜ்மார்க், அந்த இரு செட்களையும் 21-18, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஹோஜ்மார்க் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Tags : Asmita Saliha ,Kuala Lumpur ,Denmark ,Hojmark Gersfeld ,Malaysia Open badminton ,Malaysia ,
× RELATED ஐபிஎல் 2026: பெங்களூரு அணிக்கு எதிரான...