சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது.
