×

படுக்கையில் தள்ளி அத்துமீறல்; இந்திய இளைஞரை பலாத்காரம் செய்த பெண் உயர் அதிகாரி மீது பரபரப்பு புகார்

வாஷிங்டன்: உலகின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவன உயரதிகாரி ஒருவர் இந்திய இளைஞரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்றானது ஜேபி மோர்கன் சேஸ். இந்த நிறுவனத்தில் லோர்னா ஹஜ்தினி என்பவர், உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்று, ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எக்ஸிகியூட்டிவ் படித்து முடித்தவர். இவர் மீது ஜூனியர் ஊழியர் ஒருவர் பலாத்கார புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஜூனியர் ஊழியரை லோர்னா ஹஜ்தினி என்பவர் கடந்த 2024ம் ஆண்டு முதல் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரது துன்புறுத்தல், அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. அதாவது அந்த இளைஞரை “பிரவுன் இந்தியன்” என்று அழைத்ததோடு, நீ என்னுடன் இல்லையென்றால் உனக்கு பதவி உயர்வு கிடைக்காது. என்னுடன் நெருக்கமாக இல்லை என்றால் உன் வாழ்வாதாரத்தை அழித்துவிடுவேன். உன்னை விலைக்கு வாங்கிவிட்டேன்’ என்று மிரட்டியுள்ளார். மேலும் அவரது பாலியல் இச்சைகளுக்காக, அந்த இளைஞருக்கு தெரியாமல் ‘ரூஃபீஸ்’ எனப்படும் மயக்க மருந்தையும், மற்ற சில மருந்துகளையும் லோர்னா ஹஜ்தினி கொடுத்துள்ளார்.

மேலும் ஒருமுறை, அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று, அங்கிருந்த அந்த அவரது மனைவியை மிகவும் ஆபாசமாகவும், இனவெறியோடும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். அந்த இளைஞரிடம் அத்துமீறலில் ஈடுபட்டபோது கதறி அழுதுள்ளார். அப்போது, “அழுவதை நிறுத்து… நீ ஒரு முட்டாள், உன்னை யார் நம்ப போகிறார்கள்?” என்று லோர்னா ஹஜ்தினி ஏளனம் செய்துள்ளார். இதனால் கடந்தாண்டு மே மாதம் ஜேபி மோர்கன் நிர்வாகத்திடம் அந்த இளைஞர் புகார் செய்தார். அதை நிர்வாகம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞரின் வழக்கறிஞர் கூறுகையில்,
‘லோர்னா இன்னும் அதே பதவியில் நீடிக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞரோ வேலையை இழந்து, மன ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிதைந்து போயுள்ளார்’ என்றார். இதன் காரணமாக மன உளைச்சல் மற்றும் வருமான இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரி அந்த இளைஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்திய இளைஞர் தொடர்ந்துள்ள இந்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதேநேரம் தன் மீதான புகார்களை லோர்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Tags : Washington ,JB Morgan Chase ,United States ,
× RELATED ஈரான் மீதான போர் விவகாரத்தில் 60 நாள்...