- இந்தியா
- நியூயார்க்
- கிங் சார்லஸ்
- இங்கிலாந்து
- மேயர் மமத்தானி
- கிங் சார்லஸ்
- கிங் சார்லஸ் III
- ஐக்கிய மாநிலங்கள்
- ராணி கமிலா
நியூயார்க்: கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் மம்தானி வலியுறுத்தினார். இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மன்னர் 3ம் சார்லசும், ராணி கேமிலாவும், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், மன்னர் 3ம் சார்லஸை நியூயார்க் நகர மேயரும், இந்திய வம்சாவளியுமான சோஹ்ரான் மம்தானி சந்தித்து பேசினார்.
முன்னதாக, நிருபர்களிடம் பேசிய மம்தானி, ‘பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸை சந்திக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி தருமாறு அவரிடம் வலியுறுத்துவேன்’ என்றார். ஆனால், அந்த சந்திப்பின்போது வைரத்தை பற்றிய பேச்சு நடத்தப்பட்டதா? என்பது குறித்து தெளிவான தகவல் ஏதுமில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்துவிட்டது.
