- திமுகா
- N. R. காங்கிரஸ் கூட்டணி
- காங்கிரஸ்
- கேரளா
- மேற்கு வங்காளம், பாஜா
- அசாம்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- என்ஆர் காங்கிரஸ் கூட்டணி
- அசாம் பா
- ஜாவு
- காங்கிரஸ் கட்சி
- ஜவுவா, கேரளா
புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியும், அசாமில் பா.ஜவும் ஆட்சியை தக்க வைக்கிறது. அதே சமயம் மேற்குவங்கத்தில் பா.ஜவும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் கேரளா, அசாம், புதுச்சேரியில் ஏப்.9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாட்டில் ஏப்.23ஆம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்.23, 29ஆம் தேதி என இரண்டு கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அசாம் மாநிலத்தில் 85.38 சதவீதமும், புதுச்சேரியில் 89.83 சதவீதமும் வாக்குப்பதிவானது. கேரளாவில் 78.27 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழ்நாட்டில் 85.10 சதவீதம் என்ற அளவில் வாக்குப்பதிவானது. இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களிலேயே மிக அதிக வாக்களிப்பு சதவீதத்தை எட்டி சாதனை படைத்தது.
இந்த நிலையில் மேற்குவங்கத்தில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தது. அங்கு முதற்கட்டத்தில் 93.19 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 91.66 சதவீதமும் பதிவானது. இதன் மூலம் மேற்குவங்கமும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் 92.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் நேற்று மாலை 6.30 மணிக்கு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக கூட்டணி 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அக்னி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மேட்ரிஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-110 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரிபப்ளிக்-பி மார்க்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65-85 தொகுதிகளிலும், தவெக 16-26 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘என்டிடிவி ஆக்ஸிஸ் மை இண்டியா’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜேவிசி’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ பீப்பிள் இன்சைட்’ கருத்துக்கணிப்பில் திமுக 120 முதல் 140, அதிமுக 60 முதல் 70, தவெக 30 முதல் 40 இடங்களை பிடிக்கும் என்றும், ‘பிரஜா போல்’ கருத்துக்ணிப்பில் திமுக 148 முதல் 168 இடங்களையும், அதிமுக 61 முதல் 81 இடங்களையும், தவெக 1 முதல் 9 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா: கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 140 இடங்களில் 71 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ‘என்டிடிவி ஆக்ஸிஸ் மை இண்டியா’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 இடங்களையும், இடதுசாரி கூட்டணி 49 முதல் 62 இடங்களையும், பா.ஜ 3 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
‘பீப்பிள் இன்சைட்’ கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 66 முதல் 76 இடங்களையும், இடதுசாரி கூட்டணி 58 முதல் 68 இடங்களையும், பா.ஜ 10 முதல் 14 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 இடங்களையும், இடதுசாரி கூட்டணி 55 முதல் 65 இடங்களையும், பா.ஜ 3 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஓட் வைப்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 80 இடங்களையும், இடதுசாரி கூட்டணி 58 முதல் 68 இடங்களையும், மற்றவர்கள் 4 இடங்கள் வரையும் பிடிக்கலாம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ்-பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ரங்கசாமி உள்ளார். தேர்தல் கருத்துக்கணிப்பில் அங்கு மீண்டும் முதல்வர் ரங்கசாமி ஆட்சியை தக்கவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 30 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை ரங்கசாமி தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரஜா போல்’ கருத்துக்கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ கூட்டணி 19 முதல் 25 இடங்களையும், திமுக- காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘காமகயா அனலிட்டிக்ஸ்’ கருத்துக்கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ கூட்டணி 17 முதல் 24 இடங்களையும், திமுக- காங்கிரஸ் கூட்டணி 4 முதல் 7 இடங்களையும், தவெக 1 முதல் 2 இடத்தையும், மற்றவர்கள் 1 இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
‘என்டிடிவி ஆக்சிஸ் மை இண்டியா’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ கூட்டணி 16 முதல் 20 இடங்களையும், திமுக- காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 8 இடங்களையும், தவெக 2 முதல் 4 இடங்களையும், மற்றவர்கள் 1 முதல் 3 இடத்தையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ கூட்டணி 16 முதல் 19 இடங்களையும், திமுக- காங்கிரஸ் கூட்டணி 10 முதல் 12 இடங்களையும், மற்றவர்கள் 1 முதல் 2 இடங்களையும் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு முதன்முறையாக பா.ஜ ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. மொத்தம் உள்ள 294 இடங்களில் பா.ஜ 148 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ‘ஜன்மாத் போல்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 195 முதல் 205 வரையும், பா.ஜ 80 முதல் 90 வரையும், காங்கிரஸ் கட்சி 1 முதல் 3 இடங்களையும், இடதுசாரி 1 இடத்தையும், மற்றவர்கள் 3 முதல் 5 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேட்ரிக்ஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 125 முதல் 140 வரையும், பா.ஜ 146 முதல் 161 வரையும், மற்றவர்கள் 6 முதல் 10 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பி மார்க்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 118 முதல் 138 வரையும், பா.ஜ 150 முதல் 175 வரையும், மற்றவர்கள் 2 முதல் 6 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 177 முதல் 187 வரையும், பா.ஜ 95 முதல் 110 வரையும், காங்கிரஸ் கட்சி 1 முதல் 3 இடங்களையும், இடதுசாரி 1 இடத்தையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ போல் டைரி’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 99 முதல் 127 வரையும், பா.ஜ 142 முதல் 171 வரையும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 இடங்களையும், இடதுசாரி 2 முதல் 3 இடத்தையும், மற்றவர்கள் 1 இடத்தையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ பிரஜா போல்’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 85 முதல் 110 வரையும், பா.ஜ 178 முதல் 208 வரையும், மற்றவர்கள் 5 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம்: அசாம் மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 126 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 64 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பா.ஜ ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘என்டிடிவி ஆக்சிஸ் மை இண்டியா’ வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ 88 முதல் 100 இடங்களையும், காங்கிரஸ் 24 முதல் 36 இடங்களையும், மற்றவர்கள் 3 இடங்களையும் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்மாத் போல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ 87 முதல் 98 இடங்களையும், காங்கிரஸ் 29 முதல் 30 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ 88 முதல் 101 இடங்களையும், காங்கிரஸ் 23 முதல் 33 இடங்களையும், ஏஐயுடிஎப் 2 முதல் 5 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காமகயா அனலிட்டிக் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ 85 முதல் 95 இடங்களையும் காங்கிரஸ் 26 முதல் 39 இடங்களையும், மற்றவர்கள் 3 இடங்களையும் பிடிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் 25 முதல் 32 இடங்களையும், மற்றவர்கள் 6 முதல் 12 இடங்களையும் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் வெளியிட்டுள்ள கருத்துகணிப்பில் பா.ஜ 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 34 இடங்களையும், மற்றவர்கள் 2 முதல் 4 இடங்களையும் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போல் டைரி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ 86 முதல் 101 இடங்களையும், காங்கிரஸ் 15 முதல் 26 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4 ஆம்தேதி எண்ணப்பட உள்ளன. அப்போது இந்த கருத்துக்கணிப்பு பற்றி விவரம் தெரிய வரும்.
* தமிழ்நாடு
கட்சிகள் திமுக அதிமுக தவெக மற்றவர்கள்
அக்னி நியூஸ் சர்வீஸ் 169 64 1 4
பீப்பிள்ஸ் பல்ஸ் 125-145 65-80 18-24 2-6
மின்னம்பலம் 155 72 5 2
பி மார்க் 125-145 65-85 16-26 1-6
மேட்ரிஸ் 122-132 87-110 10-12 0-6
சாணக்கியா 145-160 50-65 13-18 5-8
பீப்பிள்ஸ் இன்சைட் 120-140 60-70 30-40 0-4
பிரஜா போல் 148-168 61-81 1-9 0
* புதுச்சேரி
கட்சிகள் என்ஆர் காங்.-பா.ஜ திமுக-காங். தவெக மற்றவர்கள்
பிரஜா போல் 19-25 6-10 0 0
காமகயா அனலிட்டிக்ஸ் 17-24 4-7 1-2 0-1
ஆக்சிஸ் மை இண்டியா 16-20 6-8 2-4 1-3
பீப்பிள்ஸ் பல்ஸ் 16-19 10-12 0 1-2
* கேரளா
கட்சிகள் காங். இடதுசாரி பா.ஜ மற்றவர்கள்
ஆக்சிஸ் மை இண்டியா 78-90 49-62 0-3 0
பீப்பிள்ஸ் இன்சைட் 66-76 58-68 10-14 0-1
பீப்பிள்ஸ் பல்ஸ் 75-85 55-65 0-3 0
ஓட் வைப் 70-80 58-68 0 0-4
* மேற்குவங்கம்
கட்சிகள் திரிணாமுல் பா.ஜ காங். கம்யூ. மற்றவர்கள்
ஜன்மாத் போல் 195-205 80-90 1-3 0-1 3-5
மேட்ரிக்ஸ் 125-140 146-161 0 0 6-10
பி மார்க் 118-138 150-175 0 0 2-6
பீப்பிள்ஸ் பல்ஸ் 177-187 95-110 1-3 0-1 0
போல் டைரி 99-127 142-171 3-5 2-3 0-1
பிரஜா போல் 85-110 178-208 0 0 0-5
*அசாம்
கட்சிகள் பா.ஜ காங். ஏஐயுடிஎப் மற்றவர்கள்
ஆக்சிஸ் மை இண்டியா 88-100 24-36 0 0
ஜன்மாத் போல் 87-98 29-30 0 0
ஜேவிசி 88-101 23-33 2-5 0
காமகயா அனலிட்டிக் 85-95 26-39 0 0-3
மேட்ரிக்ஸ் 85-95 25-32 0 6-12
பீப்பிள்ஸ் இன்சைட் 88-96 30-34 0 2-4
போல் டைரி 86-101 15-26 0
