×

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் தற்போது ரூ.400 குறைந்துள்ளது

 

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் தற்போது ரூ.400 குறைந்துள்ளது. தங்கத்தின் மீதான ஆர்வம் மத்திய வங்கிகள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் பவுனுக்கு ரூ.65 ஆயிரம் வரை அதிகரித்து நகைபிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்ததால் திடீரென தங்கம் விலையானது பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஈரான்- அமெரிக்க போராலும் ஒரு பக்கம் தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது. இதையடுத்து இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் தற்போது ரூ.400 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது

 

Tags : Chennai ,Shavaran ,
× RELATED செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க...