ஜெயலலிதா பிறந்தநாள் விழா

இடைப்பாடி, பிப்.25: கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், கோரணம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் கோபால், அதிமுக ஒன்றிய மகளிரணி செயலாளர் தங்க ஆறுமுகம், விவசாய பிரிவு ஒன்றிய பொருளாளர் சிட்லிங்கம், ஊராட்சி உறுப்பினர்கள் செல்விமணி, மாணிக்கவாசகம், பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Stories:

>