×

கலால் வழக்கில் கெஜ்ரிவாலை தொடர்ந்து சிசோடியாவும் உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராக மறுப்பு

புதுடெல்லி: கலால் கொள்கை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன் தொடரும் விசாரணையில் ஆஜராவ போவதில்லை என்று சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், 2024ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன் ஆஜராகப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

நீதிபதி ஒருதலைபட்சமாக நடப்பார் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார். கெஜ்ரிவாலை தொடர்ந்து ஆம் ஆத்மியை சேர்ந்த தலைவரான மணீஷ் சிசோடியாவும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா முன் தொடரும் விசாரணையில் ஆஜராக போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மாக்கு எழுதிய கடிதத்தில் எனது சார்பாகவும் கலால் வழக்கில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் துஷார் மேத்தா கையில் உள்ளது. நான் நீதியை எதிர்பார்க்கவில்லை. சத்தியாகிரகத்தை தவிர வேறு பாதை இல்லை. சிக்கலான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. சத்யாகிரகம் குறித்த மகாத்மா காந்தியின் போதனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவால் எடுத்துள்ள நிலைப்பாட்டில் நான் மரியாதையுடன் உடன்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Sisodia ,Court ,Kejriwal ,Kalal ,NEW DELHI ,DELHI ,SWARNA KANTHA SHARMA ,
× RELATED வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் அஷ்டலட்சுமிகள்: பிரதமர் மோடி புகழாரம்