×

ரஷ்யாவிலிருந்து 4வது எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு அடுத்த மாதம் வருகிறது: பாதுகாப்பு துறை தகவல்

புதுடெல்லி: எதிரி நாடுகளின் ஏவுகணை மற்றும் டிரோன்களை தரையிலிருந்து நடுவானில் இடைமறித்து அழிக்கக் கூடிய 5 எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா 5 பில்லியன் டாலர் (ரூ.45,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை கடந்த 2018ல் மேற்கொண்டது. இதில் ஏற்கனவே 3 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்பட்டு விட்டன. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட 4 நாள் போரின் போது, எஸ்-400 அமைப்புகள் வெகு சிறப்பாக செயல்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பல சீன தயாரிப்பு டிரோன்கள் எஸ்-400 அமைப்பால் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், தற்போது 4வது எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா பெற இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஏவுகணை அமைப்பு கப்பல் மூலம் ரஷ்யாவிலிருந்து புறப்பட்டு விட்டதாகவும், அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்து சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எஸ்-400 அமைப்புகளை வாங்கினால், எதிரிகளை தடைகள் மூலம் எதிர்கொள்ளும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே மிரட்டி இருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் இந்தியா எஸ்-400 அமைப்பை வாங்கி இருக்கிறது.

Tags : Russia ,Defense Ministry ,New Delhi ,India ,
× RELATED கலால் வழக்கில் கெஜ்ரிவாலை தொடர்ந்து...