×

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுடெல்லி: கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். உண்மையான கட்டுப்பாடு கோடு நெடுகிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவது மற்றும் பரந்த பிராந்திய பாதுகாப்பு கவலைகள் குறித்தும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜூனுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளில் மேற்கு ஆசிய நெருக்கடி விவகாரம் இடம்பெற்றதா என்பது உடனடியாக தெரியவில்லை. ஷாங்காய் மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மீது ஷங்காய் அமைப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த பெரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் எந்தவிதமான இரட்டை நிலைபாடுகளுக்கும் இடமிருக்கக் கூடாது. தீவிரவாதிகளின் மையப்புள்ளிகள் இனிமேல் நியாயமான தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்ற இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிரூபித்துள்ளது” என்றார்.

Tags : Minister ,Rajnath Singh ,China ,Russia ,Shanghai Cooperation Organisation ,SCO ,New Delhi ,Bishkek, Kyrgyzstan ,Affairs ,Minister Rajnath… ,
× RELATED கலால் வழக்கில் கெஜ்ரிவாலை தொடர்ந்து...