×

அனில் அம்பானியின் ரூ. 3,034 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி பல்வேறு பிரச்னைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக வங்கிகளை மோசடி செய்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அனில் அம்பானிக்கு எதிராக வழக்குளை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறை (ஈடி)ரூ.3034 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

இதில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, கண்டாலாவில் உள்ள ஒரு பண்ணை வீடு, அகமதாபாத் அருகே உள்ள சனந்தில் நிலங்கள் மற்றும் ஆர்-இன்பிரா நிறுவனத்தின் 7.71 கோடி பங்குகள் உள்ளிட்டவை அடங்கும் என வட்டாரங்கள் தெரிவித்தன. அனில் அம்பானி குழுமத்திற்கு எதிரான வழக்குகளில் முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.19,344 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Anil Ambani ,New Delhi ,Mukesh Ambani ,Anil ,Ambani ,Reliance Group ,
× RELATED கலால் வழக்கில் கெஜ்ரிவாலை தொடர்ந்து...