×

பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதிகளில் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர், ஏப்.21: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று பழவந்தாங்கல், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சுதா பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யம்பெருமாள், கவுன்சிலர்கள் தேவி ஏசுதாஸ், துர்கா தேவி நடராஜன் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நங்கநல்லூர் மார்க்கெட் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது 164வது வார்டு கவுன்சிலர் தேவி யேசுதாஸ், காங்கிரஸ் வட்டத் தலைவர் கோ.சந்தானம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் வர்த்தகர் அணி அமைப்பாளர் பாபு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்.

பின்னர், நங்கநல்லூர் சுதந்திர பூங்காவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து, தா.மோ.அன்பரசன் விளையாடி வாக்கு சேகரித்தார். நங்கநல்லூரில் திமுக நிர்வாகி லியோ சுதாகர் தலைமையில் வேட்பாளர் தா.மோ.அன்பரசனுக்கு மலர் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் எம்ஜிஆர் சாலையில் மாவட்ட பிரதிநிதி பி.ஆர்.சுரேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் இப்ராகிம், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் நடராஜன், ஏசுதாஸ், உலகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீகாந்த், ரமணா, இளைஞர் அணி சீனிவாசன், சந்திரசேகர், விஜய் பாபு, அணிகளின் சார்பாக மீன் மோகன், காங்கிரஸ் சார்பாக பகுதி தலைவர்கள் ரமேஷ் ஆதம் பிரகாஷ், மோகன கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் ஆவின் ஆனந்த், லயன் காமராஜ், ஸ்டீபன் தாமஸ், தேமுதிக பகுதி செயலாளர் நாராயணன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட தலைவர் கிருபாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Palwanthangal, Nanganallur ,Mo ,Anbarasan ,Alandur ,Alandur Assembly Constituency ,Mo. Anbarasan ,Pavanthangal ,Nanganallur ,Secretary of State ,Alandur Region ,N. Chandan ,South Chennai ,West District Congress ,Vice President ,Sudha Prasad ,
× RELATED சிட்லபாக்கம் ஏரியில் நடைபயிற்சி...