×

சிட்லபாக்கம் ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசாரம்

தாம்பரம், ஏப்.21: தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களை சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொது மக்களிடம் பேசுகையில், ‘சிட்லபாக்கம் ஏரி பல ஆண்டுகளாக முறையாக பராமரிப்பின்றி கிடந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.25 கோடியில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாகவும், குடியிருப்பு பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் விதமாகவும், சிறுவர்கள் மகிழ்ச்சியோடு விளையாடும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கிடைத்திட அனைத்து பொதுமக்களும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும், என்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பாஜ மாவட்ட தலைவர் ரகுராமன், பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங், அமமுக மாவட்ட செயலாளர் கரிகாலன், பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமாகா மாவட்ட தலைவர் வி.என்.வேணுகோபால், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் எட்வின் சுதாகர், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் செபாஸ்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கே.கே.பிரபு பாண்டியன், புரட்சி தமிழகம் கட்சி தாம்பரம் செயலாளர் பி.ஹரிசங்கர், சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி செயலாளரும், சிட்லபாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ரா.மோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags : Tambaram ,AIADMK ,Chitlapakkam Rajendran ,Chitlapakkam lake ,Chitlapakkam S. Rajendran ,
× RELATED பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதிகளில் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு