×

விஜய் திடீர் ரோடு ஷோ நெரிசலில் மக்கள் அவதி

தாம்பரம், ஏப்.21: தாம்பரம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து விஜய் ரோடு ஷோ நடத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூர் பகுதிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று காலை தவெக தலைவர் விஜய் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக சென்றார். அப்போது வரதராஜபுரம் டோல்கேட் அருகே தாம்பரம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சரத் குமார், விஜய்க்கு செங்கோல் மற்றும் வீரவால் ஆகியவற்றை பரிசளித்து, மலர் தூவி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றார். பின்னர், சரத்குமாரை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். தொடர்ந்து, வேட்பாளரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags : Vijay ,Tambaram ,Thaveka ,Vijay Vandalur - Meenjur ,Thiruvallur ,
× RELATED தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் முதல்வர்...